நிலையற்ற நிலவில்
நீங்கா ஒளியாய்
வந்தாய்.
சுவையற்ற வாழ்வில்
அறுசுவை விருந்தாய்
வந்தாய்.
நீரற்ற ஓடையில்
ஊறுகின்ற ஊற்றாய்
வந்தாய்.
எதுவுமற்ற என்னில்
சகல செல்வமாய்
வந்தாய்.
இனிமையற்ற இரவில்
இனிய கீதமாய்
வந்தாய்.
யாருமற்ற என்வாழ்வில்
உயிர் துணையாய்
வந்தாய்.
அர்த்தமற்ற வாழ்வில்
இனிவாழும் அர்த்தமாய்
வந்தாய்..
என் உயிரே 💞💞💞💕💕
Comments
Post a Comment