Skip to main content

Posts

தேவி தரிசனம்

திருநகை பொருந்திய என் தேவியின் வெட்கம் பொதிந்த நல் முகம், இந்த பாவியின் பாவங்களை தீர்த்ததோ!! உடல் அணுக்களுக்குள் ஒரே குழப்பம், கூச்சல் தன் உயிரின் பாதியை உணர்ந்துவிட்டாதோ என்னவோ தேவியின் விரல் தீண்டியதால். குத்தி கிழிக்கும் மூக்கு வெட்கம் பட்டவுடன் சிவப்பது என்ன மாயமோ! கண்ணில் என்ன மாயம் வைத்து இருக்காளோ கண்ணில் பட்டவரை எல்லாம் மாய வலையில் விழ செய்கிறது. இடையில் உரசும் உடைகள் இவளுக்கு என்ன தேவ மங்கையர்களிடம் இருந்து பெறப்பட்டதோ. சொல் பேச்சி கேட்கவில்லை இந்த நெஞ்சு, அதில் கலந்ததோ காதல் நஞ்சு. நாளும் தெய்வத்தை நாடி சென்றதால் - எனை தேடி வந்த தேவதையே!!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Recent posts

என் பூங்குயிலே

உனை சுத்தியே நாளும் வர வேண்டும் உனை பத்தியே நாளும் நினைக்க வேண்டும் உன் நெத்தியில் கோடி முத்தம் நாளும் இட வேண்டும் என் பூங்குயிலே.

உனை நான் காணும் போது

சில நொடியாவது என் நெஞ்சில் நீ  சாய்ந்து இருக்க வேண்டும். சாய்ந்து என் இதயம், உன் பெயரை ஜெபிப்பதை கேட்க வேண்டும். விழிநீர் பாயும் வரை ஒருவரை ஒருவர் கண்ணால் பார்க்க வேண்டும். குங்குமம் இருக்கும் இடத்தில் அதன் சொந்தக்காரன் நான் என் இதழ்கள் பதிய வேண்டும். உன் விரல்கள் என் விரல்களுக்குள் பதுங்கியே பல நேரம் இருக்க வேண்டும். உனை விட்டு பிரிய மனமில்லாமல் கால்கள் பதர  வேண்டும். உனை விட்டு பிரிந்து செல்லும் போதும் என் கண்கள் குளமாக வேண்டும் என் குல தெய்வமே!!! ❤️❤️❤️❤️ I love you ❤️❤️❤️❤️❤️

நிஜமாகிவிடும்

கணவனுக்கு மனைவி தான் சாமி!!! மனைவிக்கு கணவன் தான் சாமி!!! இதிகாச கதைகளில்!. இதை இருவரில் யாரேனும் ஒருவர் மட்டும் உணர்ந்தால் போதும் உண்மையாகிவிடும் நிஜத்தில்!!!

மண்ணிலே சொர்க்கம்

கணவன் மனைவி மனக்கசப்பில்  முதலில் விட்டு கொடுப்போர் முதலில் விண்ணுலக சொர்க்கம் புகுவர். எப்போதுமே விட்டு கொடுப்போர் மண்ணுலக சொர்க்கம் படைப்பர்

என்ன கைமாறு

நீ எனை விரும்பும் படிக்கு, தகுதி எனக்கு இங்கில்லை. நான் உனை சேரும் படிக்கு, உன் நிலையோ எனக்கு எட்டாத தூரம். இருப்பினும் மண்ணில் எனக்கு வாழ்வளித்தாய். நான் இனி என்ன கைமாறு செய்வேனோ என் தெய்வமே உனக்கு.

என்னடி மாயாவி நீ

உன் தீண்டல்களும் பார்வைகளும் வாயில் கரையும் பஞ்சு மிட்டாய் போல நொடியில் கரைந்தாலும், அதன் தாக்கங்களோ, நாளும் ஓடையில் தவழும் கூலாங் கற்கள் போல உடையாமல் உள்ளத்திலே உருளுகிறது என்ன மாயமோ!!!!